காலநிலையில் மாற்றம் – சிவப்பு எச்சரிக்கை
காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கடற்பகுதியில் மீள் அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும் அது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நாளை (10) புயலாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment