எரிபொருள் விலை மேலும் குறையும்! அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதுடன் , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளன.
இதற்கமைய நாட்டில் நிறுவப்படவுள்ள 450 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தலா 150 என மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வெளிநாட்டு எரிபொருள் விநியோக்கத்தர்களுக்கு வழங்கப்படும்.
முக்கிய சந்திப்பு
ஒரு மாதத்திற்குள் புதிய விநியோகத்தர்கள் இலங்கையில் அவர்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
அதன் பின்னர் எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதுடன், விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும்.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் எரிபொருள் விலை சூத்திரம், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் விநியோகம், எண்ணெய் தாங்கி களஞ்சியசாலை வசதிகளை விரிவாக்கம் செய்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment