ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா சாள்ஸ் நிர்மலநாதன்

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழரசுக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (09.05.2023) நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா. சாணக்கியன், சிவஞானம் சிறீதரன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.



சாள்ஸ் நிர்மலநாதனின் பெயர் புறக்கணிப்பு

இருப்பினும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துக்கொண்டாரா இல்லையா என்பது தொடர்பில் ஊடகங்கள் மத்தியில் தற்போது கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழரசு கட்சி சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.