புதிய ஆளுநர்கள் நியமனத்துக்கு ஐவரின் பெயர்கள் முன்மொழிவு
அவர்களுள் நால்வர் அரசியல்வாதிகள், ஒருவர் அதிகாரி என தெரியவந்துள்ளது.
நான்கு அரசியல்வாதிகளுள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகியோரின் பெயர்கள் அடங்குகின்றன.
புதிய ஆளுநர்களின் நியமனம்
ஜனாதிபதி பிரிட்டனிலிருந்து நாடு திரும்பியதும் புதிய ஆளுநர்களின் நியமனம் இடம்பெறும் என்று கடந்த வாரம் அரச தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஜனாதிபதி இவ்வாரம் திங்கட்கிழமை நாடு திரும்பியுள்ள நிலையில் புதிய ஆளுநர்கள் நியமனம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment