அனைத்து மதங்களுக்கும் சமமான இடம் மற்றும் இருப்புக்கு பாதுகாப்பு வழங்கப்படும்
இன்று எமது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து,மக்களின் வாழ்க்கை சீரழிந்து போயுள்ளதாகவும், ஜீவனோபாயத்தை நடத்த முடியாமல் மக்கள் ஆதரவற்ற நிலையிலுள்ளதாகவும், இவ்வாறான நிலையில் சசுனட அருண வேலைத்திட்டத்தின் ஊடாக பௌத்த மத விகாரைகளை புனரமைக்கவும், கத்தோலிக்க தேவஸ்தானங்களுக்கு திருத்தம் , மஸ்ஜிதுகளுக்குப் புதுப்பொழிவு, தர்மத்தின் ஒளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கவும் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவ்வாறே, மனித வாழ்வின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களான கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை கட்டியெழுப்ப பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் அனைத்திலிருந்தும் நாட்டைக் கட்டியெழுப்பவே எதிர்பார்ப்பதாகவும், நாட்டை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளதாகவும், இதனை மேற்கொள்வதற்கான துரித வழி தகவல் தொழில்நுட்ப ரீதியான ஏற்றுமதி திட்டமாகும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்தும் பிரபஞ்சம் போன்ற தகவல் தொழில்நுட்ப ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் வகையிலையே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பௌத்த விகாரைகள் போலவே ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய இடத்தை அரசாங்கம் வழங்காவிட்டாலும், எதிர்க்கட்சி இந்த அனைத்து மத ஸ்தலங்களிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்த மத விகாரைகள் மூலம் புத்திஜீவிகளை உருவாக்கும் நிலையங்களாக உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் பௌத்த மதத்திற்கு மாத்திரமன்றி ஏனைய மதங்களுக்கும் சமமான இடம் வழங்கி சக மதங்களின் இருப்புக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 1125 தூபிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சசுனட அருண வேலைத்திட்டத்தின் கீழ் 12 ஆவது தூபி ஆனமடுவ துமிந்தராம விகாரைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கோரகஹயாய, ராமன்குளம், மஹகும்புக்கடை ஸ்ரீ துமிந்தராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தூபி மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கையளிக்கப்பட்டது.
Post a Comment