பிரதமராக தயாராகும் மகிந்த - கொழும்பில் போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து வரும் சில நாட்களில் மகிந்த பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சியை முறியடிக்கக் கோரி, கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக உருவாக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment