மன்னார் முத்தரிப்புத்துறை மற்றும் வவுனியா மாணவர்களை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வரும் மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மாணவனும் வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் நேற்றைய தினம் (8) மாங்குளம் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் மாணவர்கள் இருவரும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வருவது வழமை நேற்றைய தினம் (8) பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வேண்டுவதற்காக சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை
அதன் பிறகு இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் ஒருவரால் காணாமல் போன மாணவனின் (மன்னார் முத்தரிப்புத்துறை) பெற்றோருக்கு தொடர்பு எடுத்து மகன் வீட்டுக்கு வந்தாரா? என்று கேட்டுள்ளனர் குறித்த பெற்றோர்கள் ஏதேனும் பிரச்சினையா? என்று கேட்ட போது விடுதி காப்பாளர்களால் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பாக விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முத்தரிப்புத்துறையை சேர்ந்த மாணவணின் பெற்றோர்கள் மாங்குளம் விடுதிக்கு சென்றுள்ளதாக மாணவனின் பெற்றோர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது
முத்தரிப்புத்துறை மாணவன் தரம் 11றிலும் வவுனியா மாணவன் தரம் 12லும் கல்வி கற்று வருகிறார்கள் இதேவேளை வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் பகுதியை சேர்ந்த மாணவணின் பெற்றோர்களும் மாங்குளம் விடுதிக்கு சென்றுள்ளதாக தெரிய வருகிறது
புகைப்படத்தில் இருக்கும் மாணவனை கண்டவர்கள் அல்லது இவர் பற்றிய தகவல் ஏதும் அறிந்தவர்கள் கீழ் உள்ள இலக்கத்திற்கு தகவல் தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் தயவு செய்து இத் தகவலை அதிகம் பகிர்ந்து குறித்த மாணவனை மீட்க உதவி செய்வோம்.0778785430
Post a Comment