திருகோணமலையில் பதற்றம்: ஆரம்பிக்கப்பட்ட பௌத்த அனுட்டானங்கள்

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக, பிரித்தோதி அனுட்டானங்களை மேற்கொண்டதால் திருகோணமலையில் இன்று (14.05.2023) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுர அருகில் இன்று (14) சிங்கள மக்கள் மற்றும் பௌத்த தேரர்கள் தலைமை தாங்க ஊர்வலமாக வந்து நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள அடைக்கப்பட்ட பகுதிக்குள் அத்தமீறி நுழைந்து சமய அனுட்டானங்களை மேற்கொண்டுள்ளனர்.

தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து பௌத்த சமய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தாய்லாந்து புத்த வருகை






இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையினர் நேற்று (13.05.2023) தொடக்கம் இன்று (14.05.2023) அதிகாலை வரை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தியிருந்த நிலத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற பின்னர் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து  பௌத்த தேரர்கள் உட்பட 2000ற்கும் மேற்பட்டவர்கள் நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்து  பிரித்தோதியதுடன் மக்கள் வழிப்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பில், திருகோணமலை மாவட்ட செயலாளரைத் தொடர்பு கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.