பால்மா – சீனி விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
06 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், லங்கா சதொச பால் மாவின் 400 கிராம் பொதியின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாகும்.
Post a Comment