திருகோணமலையில் புத்தர் சிலை தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு எதிராக சரத் வீரசேகர போர்க்கொடி


விகாரைகளை நிறுவுவதற்கும், புத்தர் சிலைகளை வைப்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கில் அனுமதியில்லை என எந்தச் சட்டத்தில் உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  கேள்வி எழுப்பியுள்ளார்.

திருகோணமலையில்  நேற்று (14.05.2023) நிறுவப்படவிருந்த புத்தர் சிலை, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வடக்கு மற்றும் கிழக்குக்கு ஒரு சட்டம் என்றும், தெற்கில் இன்னொரு சட்டம் என்றுமில்லை. பொதுவாக ஒரு சட்டம் தான் உண்டு.

பௌத்தர்கள் நாட்டில் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வழிபட முடியும். அவர்கள் விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் எந்த இடத்திலும் நிறுவ முடியும். அதை இனவாத, மதவாத அடிப்படையில் நோக்குவதை தமிழ்த் தரப்பினர் தவிர்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் நாட்டில் எங்கு சென்றும் வழிபடலாம். அவர்கள் எங்கும் ஆலயங்களை அமைக்கலாம். இதற்கு எதிராக சிங்கள மக்கள் அன்றும் சரி இன்றும் சரி எதிர்ப்புக் காட்டவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.