மகிந்த மீண்டும் எப்போது பிரதமராவார்


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியேற்பது தொடர்பில் அவரின் ஆஸ்தான ஜோதிடரிடர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைத் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது.

என்னதான் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை மகிந்த ராஜபக்ச இன்னும் கைவிடவில்லை.

பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

பிரதமர் பதவியேற்பது தொடர்பில் மகிந்த தனது ஆஸ்தான ஜோதிடரிடம் அண்மையில் ஆலோசனை கேட்டுள்ளார்.

"எதிர்வரும் மே 7ஆம் திகதியே பொருத்தமானது. அன்றைய தினமே பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அரசியலில் உங்களுக்குத் தொடர் வெற்றி கிட்டும்" என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.