கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பின்னணியில் பொலிஸார்! சிவஞானம் சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு

 கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பவற்றின் பின்னணியில் கிளிநொச்சி பொலிஸார் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03-05-2023) நடைபெற்ற போது கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச செயலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவ்வாறான மணல் அகழ்வுகளின் பின்னணியிலும் போதைப்பொருள் விவகாரத்தின் பின்னனியிலும் பொலிஸாரே செயற்பட்டு வருகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தனர்.



மணல் மாபியாக்களின் உதவி

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிடுகையில், நேற்றைய தினம் மணல் மாபியாக்களின் முழு ஒத்துழைப்புடன் கிளிநொச்சியில் பொலிஸாரால் விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் பொலிஸாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கடிதம் எழுதுகின்ற போது அந்த கடிதத்தினை மண் மாபியாக்களுக்கே காட்டியுள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அத்தனை சட்டவிரோத செயல்களின் பின்னணியிலும் பொலிஸாரே இருக்கின்றனர். அதேநேரம் மாவட்டத்தில் சேவையாற்றுகின்ற அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு பொலிஸாரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரகுமார் சுட்டிகாட்டியுள்ளார்.


பிரதேச பொது அமைப்புகளும் பொலிஸாரின் துணையுடனே மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றது என்றும், எந்த விதமான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படாத நிலையில் கிராமப்புறங்களில் குறிப்பாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஊரியான், கோரக்கண், கட்டு கல்லாறு தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் பின்னணியில் பொலிஸாரே இருக்கின்றனர் என்றும், கூடுதலான பொலிஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான டிப்பர் வாகனங்களும் குறித்த மணல் அகழ்வுகளில் ஈடுபடுவதாகவும், பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.