ஜெரம் பெர்னாண்டோ மீது உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு
மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகள் மத மோதல்களை உருவாக்கி நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால் தயவு செய்து அந்த அறிக்கையை விசாரித்து அவரிடம் அறிக்கை அளிக்க கோரப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த வாக்குமூலம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
Post a Comment