கட்சி எம்.பிக்களிடம் கொந்தளித்த சஜித்: வெளியான காரணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக கேபமடைந்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூடியுள்ளது.
அதில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பக்கம் பாய்வது பற்றியும் பேசப்பட்டுள்ளது. அது தொடர்பில் சஜித் ஆவேசத்துடன் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
தாராளமாகப் போகலாம்
இதன்போது, "அரசுப் பக்கம் போக விரும்பினால் தாராளமாகப் போகலாம். கதவு திறந்தே உள்ளது" என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சஜித் பிரேமதாச ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பக்கம் போகமாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
அதையும் தாண்டி யாரும் போக விரும்பினால் நான் அவர்களைப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டேன். தாராளமாகப் போகலாம். கதவு திறந்தே உள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment