இன, மத பிரச்சினைகளை தீவிரப்படுத்த சதி: ராஜித சேனாரத்தின


 தற்போது அதிகரித்து வரும் இன, மத முரண்பாடுகளால் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஒரு பக்கத்தில் சிங்களவர்களையும் தமிழர்களையும் தூண்டிவிட்டு இன ரீதியான பிரச்சினையை தலைதூக்கிவிட முயற்சி நடக்கின்றது.

மறுபக்கத்தில் பௌத்தர்களையும் இந்துக்களையும் முட்டி மோதவிட்டு மத ரீதியிலான பிரச்சினையை மென்மேலும் தீவிரப்படுத்த சதி நடக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் இந்த நாட்டின் நல்லிணக்கத்துக்கு பெரிதும் பாதிப்பே ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் பிரச்சினை

மேற்படி இரு பிரச்சினைகளும் ஒரே மேசையில் பேசித் தீர்த்தால் தான் அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டலாம். இல்லையேல் இந்தப் பிரச்சினைகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.