அமைச்சு பதவி தருவதாக கூறி ஏமாற்றிய ஜனாதிபதி! மொட்டுவின் எம்.பிக்கள் குமுறல்
ஜனாதிபதி அமைச்சுப் பதவிகள் தருவதாகக் கூறி தங்களை ஏமாற்றிவிட்டார் என மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்கள் பலர் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 10 அமைச்சுப் பதவிகளை அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.
மொட்டுவின் சிரேஷ்ட எம்.பிக்கள்
இதற்கமைய குறித்த பதவியினை இன்று தருகின்றேன், நாளை தருகின்றேன் எனக்கூறி பல மாதங்களாக இழுத்தடித்து வருகின்றார்.
இதனால் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்த மொட்டுவின் சிரேஷ்ட எம்.பிக்கள் இனி அமைச்சுப் பதவிகள் கேட்டு ஜனாதிபதி பின்னால் செல்லப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
Post a Comment