முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்: சரத் சூளுரை

 "போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சிகள் வழங்கி விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் "வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் ஒரு தரப்பினர் பகிரங்கமாக  நினைவேந்தி வருகின்றனர். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "அரசு நினைவேந்தல்களுக்கு அனுமதி வழங்குவதால் புலிப் பயங்கரவாதிகளையும் தமிழ்த் தரப்பினர் நினைவேந்தி வருகின்றனர்.

அத்தகைய நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். போரில் இறந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்த வேண்டுமெனில் அவர்கள் தங்களது வீடுகளுக்குள் அதனைச் செய்ய முடியும்.

அதைவிடுத்து ஊர்திப் பேரணிகள் மூலமும் கஞ்சிகள் வழங்கியும் பொது இடங்களில் விளக்கேற்றியும் வழிபடவேண்டிய அவசியமில்லை.

எதிர்காலத்தில் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.