மேடைகளில் பேசுவதால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது
இந்நாட்டின் 75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில், எதிர்க்கட்சிகள் தொகுதிவாரியாகத் தம்மை ஒருங்கிணைத்து எவ்வாறெனும் அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் தற்போதைய எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பெரும் சேவையை செய்துள்ளதாகவும், வெறும் மேடைகளில் பேசுவதால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் மாற்றுக் கட்சிகள் என்று கூறும் தரப்புகள் அதிகாரம் இன்றி மக்களுக்கு எதுவும் ஆற்றவில்லை எனவும், எனவே, அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தரப்புகளுக்கு நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றே நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தாம் ஆட்சியில் இல்லாத போதும் ஐக்கிய மக்கள் சக்தி ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தார்.
அதிகாரம் இல்லாமல் இவ்வாறான சேவையை மேற்கொள்வார்கள் என்றால், அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வளவு சேவை மேற்கொள்ள முடியும் எனவும் மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
சீரழிந்து, வங்குரோத்தாகி பல்வேறு விடயங்களால் பிளவுபட்டுள்ள நாட்டை ஐக்கிய மக்கள் சக்தி தரப்பாலே மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும், இதைவிடுத்து வேறு மாற்று இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
“வெற்றிக்கான பயணம்” எனும் கருப்பொருளில் மொனராகலை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment