பாராளுமன்றம் இன்று முதல் கூடுகிறது
பாராளுமன்றம் இன்று(09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.
அத்துடன் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் செஸ் வரி தொடர்பான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 09 கட்டளைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் இன்று(09) விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவின் கூட்டம், இன்று(09) பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
Post a Comment