வவுனியாவில் நபர் ஒருவர் செய்த மோசமான செயல் அம்பலம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வவுனியாவில் சீனிப் பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (13.05.2023) முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கையின்போது, அவரிடமிருந்து சீனிப்பாணி நிரப்பப்பட்ட 263 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேன் என சீனிப் பாணியை விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம் காலை வேப்பங்குளம் 8ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த வீட்டில் விற்பனைக்குத் தயாரான நிலையில் இருந்த 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட 750 மில்லி லீற்றர் சீனிப்பாணி மற்றும் சீனிப்பாணி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட சில பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment