யாழில் புதிய விகாரை! கண்டன போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்
யாழ்.வலிகாமம் வடக்கு,தையிட்டி சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டன போராட்டம்
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பலரும் ஒன்றிணைந்து இந்த கண்டனப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய இன்று பிற்பகல் 3 மணிக்கு தையிட்டியில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment