இலங்கைக்கு தேவையான யூரியா ரஷ்யாவிடமிருந்து
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி உரங்கள் கிடைப்பதற்கு வசதியாக ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணங்கியுள்ளது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை உறுதிப்படுத்தும் வகையிலும் யூரியா மற்றும் எம்ஓபி உரங்களை வழங்கும் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03) காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா மற்றும் எம்ஓபி உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த பருவகாலம் ஆரம்பிக்கும் முன்னர் இப்பணிகளை நிறைவு செய்து அடுத்த பருவத்தில் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி உரங்களை வழங்கும் பணி ஒழுங்கை வெற்றியடைய செய்யும் நோக்கில் பணிகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
Post a Comment