ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Post a Comment