மண்சரிவு அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு
மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (03) மாலை 4 மணி வரை இந்த அபாய அறிவிப்பு செல்லுபடியாகும்.
இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment