13 ஐ ரணிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டார்: மைத்திரி ஆரூடம்

 அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கமாட்டார் என்றே நான் நம்புகின்றேன் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாட்டை அனுப்புமாறு ஜனாதிபதி செயலாளர் கோரி இருந்தார். அதற்கு நாம் பதில் கடிதம் அனுப்பினோம். முதலில் இந்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும், அப்போது அதில் திருத்த வேண்டிய விடயங்கள், உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான கட்சியின் கருத்தை தெரிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

13 இல் உள்ள சில அதிகாரங்களை பகிர்வதில் பிரச்சினை இல்லை. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் சர்ச்சை உள்ளது. நீங்கள் (ஊடகவியலாளர்) கூறியதுபோல் 7 ஜனாதிபதிகள் கைவைக்காத விடயத்தை இந்த ஜனாதிபதியும் செய்யமாட்டார் என்றே நான் நம்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.