தமிழகத்தில் 1591 வீடுகள் இலங்கை அகதிகளுக்கு கையளிப்பு
தமிழகத்தின் 13 மாவட்டங்களிலுள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் 79.70 கோடி ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேலூரிலுள்ள மேல்மொணவூா் முகாமில் 11 கோடி ரூபா மதிப்பில் 220 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கை தமிழர்களிடம் கையளித்தார். அத்துடன் இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வழங்கினார்.
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக, தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்து மேல்மொணவூரில் ஆரம்பித்தார்.
Post a Comment