மொராக்கோ நிலநடுக்கத்தில் 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: தேசிய துக்க தினம் பிரகடனம்

 மொராக்கோவில் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012 எனவும், 2500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.




இதேவேளை மொராக்கோவின் தெற்கில் உள்ள மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், அந்த நாட்டின் மன்னரான ஆறாம் முகமது மொரோக்கோரவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்கவும் அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.