சனல் 4வின் ஆவணப்படம்: சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து பிரித்தானியாவில் விசாரணை ஆரம்பம்

 சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த படத்தொகுப்பில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 4 இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தில் சுரேஷ் சலே முறைப்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இவ்வாறான சூழலில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது என சுரேஷ் சலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை வெளியிடுவதற்கு முன், ஆகஸ்ட் 7ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வினவியதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்த காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்றும் சுரேஷ் சலே சனல் 4 இற்கு அடுத்த நாளே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.