இரத்தினபுரி - கஹவத்தை பெருந்தோட்ட வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதலின் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது.
இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜீவன்தொண்டமான் அவர்கள் கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்திற்கு கடுமையாக எச்சரித்ததாக தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கு உடன் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற முறையில் நடந்துக் கொண்ட தோட்ட முகாமைத்துவத்தை வன்மையாக கண்டித்ததுடன், உடனடியாக அவர்களுக்கு வீட்டை பெற்றுத்தரவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உள்ள மாணவிக்கு முழுமையான புலமைபரிசில் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தில் அதிகாரியாக நியமனம் ஒன்று வழங்கவும் உத்தரவிட்டதாகவும் ஜீவன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு இணங்கிய பெருந்தோட்டயாக்கம், அவர்களுக்கு உடன் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், இவ்வாண்டு வரவு செலவு திட்டத்திற்கு பின் இரத்தினபுரி மாவட்டத்திற்கு அதிகப்படியான வீடுகளை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமல்லாது குறித்த தோட்டத்திற்கு மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கும் நடடிவடிக்கை எடுக்குமாறு மேற்படி நிதியத்திற்கு மேலும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment