அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

 சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்
கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம்
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு ஆகியவை இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.