மன்னார் வந்தடைந்தார் எல்.ஏ.எம்.நப்ஸான்
போதைப்பொருளிலிருந்து இளைஞர்களை மீட்டெடுத்தல், வீதி விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல் , இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்துதல் போன்ற மூன்று விடயங்களை முன்வைத்து நாடு தளுவிய ரீதியில் சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார் புத்தளம், தில்லையடி இளைஞன் எல்.ஏ.எம்.நப்ஸான்
புத்தளம், தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய எல்.ஏ.எம்.நப்ஸான் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சைக்கிள் சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் 17ம் திகதி செவ்வாய்க் கிழமை புத்தளத்திலிருந்து ஆரம்பித்தார்
தற்போது இவர் மன்னார் மாவட்டத்தை இன்று அதிகாலை வந்தடைந்தார் இதன்போது தாராபுரம் மக்கள் மற்றும் இளைஞ்சர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டதோடு உபசரிப்பும் வழங்கப்பட்டது ,எல்.ஏ.எம்.நப்ஸான் தாராபுரத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment