கொழும்பில் பசும்பால் விநியோகம் ஆரம்பம்
கொழும்பில் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நாளை (11.09.2023) முதல் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வேலைத்திட்டம் நாளை காலை ஆரம்பமாகவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment