இலங்கை அணியின் 2024 க்கான போட்டி நாட்காட்டி

 இலங்கை ஆடவர் தேசிய அணியின் 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.



இலங்கை தேசிய அணி தனது 2024 சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிரான உள்நாட்டு தொடருடன் ஆரம்பிக்கும்.

இந்த தொடர் மூன்று ஒருநாள், மூன்று டி:20 போட்டிகளை கொண்டிருக்கும்.

அதைத் தொடர்ந்து ஜனவரி-பெப்ரவரியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி:20 போட்டிகளில் இலங்கை அணி பங்கெடுக்கும்.

அதையடுத்து, பங்களாதேஷுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் இலங்கை அனைத்து வகையான தொடர்களிலும் பங்களாதேஷை எதிர்கொள்ளும்.



பின்னர் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள 2024 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக இலங்கை அணி அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.

அந்த தொடருடன், இந்தியா, நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் அடுத்தடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.

இதனிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை இங்கிலாந்துடன், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்.

இறுதியாக நவம்பர், டிசம்பர் காலப் பகுதியில் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்துடனான சுற்றுப் பயணங்களுடன் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணியின் சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டி முடிவடையும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.