பாலஸ்தீனத்தில் 49 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட தாயும், பிள்ளையும் உருக்கமான கடிதம்....‌!

 ( ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட கடிதத்தின் அர்த்தம் இதுவாகும்)

மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் ஹமாஸ் சகோதரர்கள் என் மீதும் , எனது குழந்தை எமிலியாவுடனும் இயற்கைக்கு மாற்றமாக அன்பை பொழிந்தார்கள். திரும்ப சொல்வதாக இருந்தால் ஹமாஸ் சகோதரர்கள் என் குழந்தை எமிலியாவை தந்தையை விட மிகுந்த பாசத்துடன் கவனித்து கொண்டார்கள். மொத்தத்தில் என் மகள் எமிலியா காசாவில் ஒரு இளவரசி போல் வலம் வந்தாள்.‌ என் மகள் எமிலியா செய்கிற சுட்டி தனத்தை நீங்கள் அனைவரும் ரசித்து அவளை நன்கு நடத்தீனீர்கள்.‌


அவளுடைய அணைத்து நடவடிக்கைகளையும் பொறுமையுடன் நீங்கள் அனுகிய விதம் என்னை மிகுந்த மன சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இடம் மாறும் போதும் அனைத்து நல்ல உள்ளங்களும் ( ஹமாஸ் இயக்கத்தினர்) அப்படியே நடந்து கொண்டீர்கள். எங்களுக்கு மிகுந்த சிரமமான சூழலிலும் எல்லா உதவிகளையும் செய்தீர்கள்.‌ தண்ணீர், உணவுகள், ரொட்டி என்று எல்லா விதமான உணவுகளையும் வழங்கி எங்களை கண்ணியத்துடன் கவனித்து கொண்டீர்கள்..

மொத்தத்தில், என் மகள் எமிலியா காசாவில் ஒரு இளவரசி போல் வலம் வந்தாள்..

இறுதியாக நான் உங்களின் மகிழ்ச்சியை விரும்பி பிரார்த்தனை புரிகிறேன்.அந்த மகிழ்ச்சியை நீங்கள் விரைவில் பெற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை புரிகிறோம்...

---- டேனியல், எமிலியா

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.