இஸ்ரேலிய சிறையில் மிளகாய்ப் பொடி வீசி சித்திரவதை - பாலத்தீன பெண்ணின் அனுபவம்

 இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைப் பிடித்த மக்களை கடந்த வெளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 27) விடுதலை செய்து வருகின்றனர்.



போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 150 பாலத்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இது நான்கு நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும்.

இதுவரை, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 117 பாலத்தீனக் கைதிகளையும், ஹமாஸ் தாம் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 40 பேரையும் விடுவித்திருக்கின்றன.

இரு தரப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்கள் தாம் அனுபவித்த துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஹமாஸுடன் செய்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல், சிறையிலிருந்து விடுவிப்பதற்காக 300 பாலத்தீனக் கைதிகளின் பட்டியலைத் தயார் செய்திருக்கிறது, அதில் பெரும்பாலானவர்கள் பதின்பருவ ஆண்கள். அதன்படி பாலத்தீனர்களை விடுவித்து வருகிறது.

இஸ்ரேலால் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட முதல் பாலத்தீனக் கைதிகளில் ஒருவர், பெண் கைதியான சாரா அல்-சுவைஸா. இவர் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.

அவர், இஸ்ரேல் சிறையில் இருந்தது மிகவும் ‘அவமானகரமான’ அனுபவமாக இருந்தது என்றார். பாலத்தீனக் கைதிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவோ, உதவி செய்து கொள்ளவோ முடியாதபடி வைக்கப்பட்டிருந்ததாகவும், சிலர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைதிகளின் மீது ‘பெப்பர் ஸ்ப்ரே’ எனப்படும் மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடிக்கப்பட்டது என்றார் அவர்.

மேலும், பாலத்தீனக் கைதிகளை இஸ்ரேல் அதிகாரிகள் இருட்டு அறைகளில் அடைத்து வைத்திருந்ததாகவும், அவர்கள் குளிரில் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தார்.


“ஹமாஸ் தான் எங்கள் துயரத்தைப் புரிந்துகொண்டனர்,” என்றார் அவர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.