சம்பிக்கவுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை

 முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வாகன விபத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.



பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிர் இழந்ததாக கூறப்படும் விபத்து சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.