இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் 11 பேர் பலி

 இந்தோனேஷியாவில் ‘மெராபி ‘ எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் உயிரிந்ததுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தேடல் பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்கு சுமத்ராவில் உள்ள உலகின் மிகவும் செயல்திறன் கொண்ட எரிமலைகளில் ஒன்றான மெராபி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 2.54 மணியளவில் வெடித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிமலை வெடித்த போது அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்தனர், எனினும் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

திங்கட்கிழமை (04) 3 பேர் மீட்கப்பட்டனர், காணால் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.