$ 150 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி உடன்பாடு

 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.



நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் கருத்திட்டம் உலக வங்கியின் நிதியனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுக் கலந்துரையாடல்களில் இலங்கை பணவைப்புக் காப்புறுதித் திட்டம் மூலதனமிடல், மத்திய வங்கியின் நிறுவன ரீதியான இயலளவு விருத்தி மற்றும் குறித்த கருத்திட்ட அமுலாக்கலைக் கண்காணித்தல் போன்ற கூறுகளின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.