இலங்கையில் வெங்காயம் விலை 600 ரூபாவை தாண்டியது: ஒரு மாதத்திற்கு வெங்காயம் சாப்பிட வேண்டாம் என கோரிக்கை

 நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெங்காயம் மாபியாவை முறியடிக்க முடியும் என அதன் தலைவி ஹஷினி சில்வா தெரிவித்துள்ளார்.



கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை சந்தையில் பெருமளவு அதிகரித்துடன் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 600 ரூபாவாக உள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிக தேவை இருப்பதால், இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.எனினும், உள்ளூரில் வெங்காயம் தட்டுப்பாட்டின் பின்னணியில் மாபியா இருப்பதால், ஒரு மாதம் வெங்காயத்தை உட்கொள்வதை நிறுத்தினால், இந்த மாபியாவை முறியடிக்க முடியும் என ஹஷினி சில்வா கூறியுள்ளார்.

வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ஏன் நிர்ணயிக்க முடியாது என ஹஷினி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.ஒரு மாதம் வெங்காயம் சாப்பிடாமல் நிறுத்தினால் வெங்காயம் மாபியாவிற்கு என்ன நடக்கும் என்று பார்க்க முடியும்.

இறக்குமதியாளர்களுக்கும் அரசாங்க அமைச்சர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.