காற்று சுழற்சி.
தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு புதிய காற்று சுழற்சி நேற்று உருவாகி உள்ளது.
இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து, இன்று இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை - 13ஆம் திகதி இலங்கையின் கிழக்காகவும்,
14ஆம் திகதி இலங்கையின் தெற்காகவும்
15ஆம் திகதி குமரி கடல் பிரதேசத்தில் பிரவேசித்து, அதன் பின்னர் அரபிய கடல் பிராந்தியத்திற்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் இன்று முதல் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரிய குமார்
ஓய்வு நிலை வானிலை நிலைய பொறுப்பதிகாரி
Post a Comment