மின்தடையால் நாடே இருளில் – மின்சார சபை ஒப்புகொண்ட விடயம்
அண்மையில் மின்னல் தாக்கம் ஒன்றின் காரணமாக இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்தது.
கொத்மலை – பியகம மின்மாற்றியில் மின்னல் தாக்கியமையே இதற்கான காரணம் என்று பின்னர் கண்டறியப்பட்டது.
இவ்வாறு மின்னல் தாக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமை தமது தவறு என்பதை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுல பெர்ணாண்டோ, இந்த தவறை மின்சாரசபை ஏற்றுக் கொண்டாலும், இவ்வாறான முன்னெச்சரிக்கை கட்டமைப்பை அமைப்பது மிகவும் செலவு மிக்கது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தமாதம் இதுதொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment