மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

 நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி பீன்ஸ், கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.



பொதுச் சந்தையில் போஞ்சி கிலோ 800 முதல் 850 ரூபாய் வரையிலும், கேரட் கிலோ 550 முதல் 600 ரூபாய் வரையிலும், கோவா கிலோ 540 ரூபாய் வரையிலும், தக்காளி ஒரு கிலோ 590 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி 1750 ரூபாய்க்கும், எலுமிச்சை 2200 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 1100 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு எதிர்வரும் நத்தார் பண்டிகை காலம் வரை தொடரும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.