வைத்தியசாலையின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார் ரிஷாட் பதியுதீன்,
அம்பாறை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (09) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அங்குள்ள குறைகளை கேட்டறிந்து வைத்தியசாலையின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம் ஹனீபா, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு தலைவர் வைத்தியர் இஸ்ஸடீன், திட்டமிடல் பிரிவு வைத்தியர் நியாஸ் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவரும், முன்னாள் அரசாங்க அதிபருமான ஹனீபா, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் கட்சியின் முக்கியஸ்தர்களான மாஹீர், தாஹீர், அஸ்மி , காதர், றியாஸ் ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலின் போது கலந்துகொண்டனர்.
Post a Comment