நாடாளுமன்றத்திற்கு முன்னால் பதற்றம்: குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
சம்பள உயர்வு கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள பத்தரமுள்ள - பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த ஆர்பாட்டமானது சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒடுக்கப்படாத காரணத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றின் பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு பெருமளவான பாதுகாப்பு வீரர்களும், கலகத்தடுப்பு பிரிவினரும் ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment