குவைத் அமீரின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!
குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய அமீர் ஷேக் நவாஃப் அல் - அஹமது அல் - ஜாபர் அல் - சபா அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள (19) குவைத் தூதரகத்துக்குச் சென்று, இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல்-உமர் அவர்களை சந்தித்து தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்ட அவர், அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
அவரது அனுதாபச் செய்தியில்,
"குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல் - அஹமது அல் - ஜாபர் அல் - சபா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன். அவரது ஆட்சிக் காலத்தில் குவைத் மக்களுக்கு மகத்தான சேவையை ஆற்றியவர். அவரின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தில் குவைத்தின் நீண்டகால நண்பர்களான இலங்கையர்களாகிய நாங்களும் பங்கேற்கின்றோம்.
அத்துடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அமீர் அவர்களின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment