நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, தபால் நிலையத்திற்கு மாற்று இடம் வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னராக தாபால் நிலைய கட்டிடம் சுற்றுலா விடுதியாக மாறப்போகின்றது என்ற தகவல்கள் கசிந்ததும் அதற்கு எதிராக இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, கட்டிடத்தினை பாதுகாக்க இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் மாதம் (09) ஆம் திகதி நுவரெலியா பிரதான தபால் நிலையத்னை சுற்றி கருப்பு கொடி கட்டி தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்களும் பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், குறித்த போராட்டத்தில் இலங்கை தபால் அதிகாரி சங்கம் , இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் அகில இலங்கை தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment