விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுநர்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச் வருகின்றனர்.
மேலும், கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும், இலங்கை மக்கள் சார்பாகவும் அனுதாபங்களை செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
Post a Comment