இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் சவூதி அரேபியா தேசிய விமான நிறுவனம்
சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனம் விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிப்ராஹிம் தனது இலங்கை விஜயத்தின் போது இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இலங்கைக்கான சவுதி பயணிகளின் கணிசமான சந்தையை கைப்பற்றுவதற்கு இந்த நடவடிக்கை பங்களிக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment