மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்களின் பாவனை அதிகரிப்பு
நிலைமை இவ்வாறு செல்லுமிடத்து சிறுவயது முதலே மாணவர்கள் பல நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும். இலங்கையில் அண்மை காலமாக முன்பள்ளிச் சிறுவர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சமூக சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன் மாணவர்கள் மத்தியில் இனிப்பை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நிலைமை இவ்வாறு செல்லுமிடத்து சிறுவயது முதலே மாணவர்கள் பல நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Post a Comment