கோட்டாபயவுக்கு எதிராக ரிஷாத் வழக்குஅடுத்த வாரம் நடவடிக்கை


 தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.




பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாத் பதியுதீன் எம்.பி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைது செய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்திருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் -  தனக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வழங்குமாறு தனது எல்லைக்குட்பட்ட அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததாகவும், இதன் காரணமாக தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


TID பணிப்பாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.


வழக்குப்பதிவு செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.